(துறையூர் தாஸன்)
இவ் வைத்திய முகாமில் அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள குடல் மற்றும் ஈரல் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.சிவதாசன் அவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட பொது வைத்திய நிபுணர் டாக்டர் முத்து முருகமூர்த்தி அவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெ.ஜெயரூபன் அவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா வாமதேவன் அவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தோல் சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் என்.தமிழ்வண்ணன் அவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் உளநல விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ரீ.கடம்பநாதன் அவர்களும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் யுரேகா விக்கிரமசிங்க அவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் போசாக்கு பற்றிய கலந்துரையாடல் போசணை வைத்தியர் டாக்டர் எஸ்.விவேகானந்தன் அவர்களாலும் மேறக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் வைத்திய நிபுணர்கள் உட்பட மேலும் பல அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் கலந்துகொண்டு வைத்தியச்சேவையாற்றவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கண் வைத்தியக் குழுவினால் கண் பரிசோதனைகளும் தொற்றாநோய் வைத்தியச் சேவையும் பல்வேறு துறைசார் வைத்திய நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வைத்தியக் குழுவினால் மேற்க்கொள்ளப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்படவுள்ளன.
நிறை குறைவான 3 வயதுக்குட்பட்ட சிறுபிள்ளைகளுக்கும்,உடற் திணிவுச் சுட்டி குறைவான கற்பினித்தாய்மார்களுக்குமான போசணை பற்றிய அறிவுறுத்தல் கலந்துரையாடல் மட்டு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் போசணை மருத்துவர் எஸ்.விவேகானந்தன் அவர்களால் மேற்க்கொள்ளப்படவுள்ளது.
சகல நோய்களுக்குமான மருத்துவச் சேவைகள் அனுபவம் வாய்ந்த வைத்தியக் குழுவினரால் மேற்க்கொள்ளப்பட்டு உயர்தர இலவச மருத்துவ சேவையினையும் இலவச மருந்துகளையும் பெற்று அனைவரையும் பயனடையுமாறு விஞ்ஞான விழிப்புனர்வு அபிவிருத்தி ஒன்றியத்தினர் துறைநீலாவணை வாழ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.













