(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விடுதிக்கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(02) வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்றது.
முனைப்பு நிறுவனத்தின் இலங்கை கிளையினால் குறித்த அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. பாடசாலையில் கல்வி பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் 2017ம் ஆண்டிற்கான கல்விச் செயற்பாட்டிற்காக இவை வழங்கி வைக்கப்பட்டது.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் வேளாண்மை வயலை அண்டிய பிரதேசத்தில் இப்பாடசாலை அமையப்பெற்றுள்ளதுடன், இங்குள்ள மக்கள் அன்றாடம் கூலிவேலைகளை செய்தே தமது குடும்பத்தினை கொண்டு செல்கின்றனர் மேலும் இப்பாடசாலை தரம் 5வரையான வகுப்புக்களை கொண்டே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் ம.லச்சுதன், இலங்கை முனைப்பு கிளையின் பொருளாளர் எஸ்.தயானந்தரவி, இ.குகநாதன், கிராமசேவை உத்தியோகத்தர் ய.சயந்தன், பாடசாலை சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.












