(சுபஜன்)
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் மட்டக்களப்பு வாகரை இராலோடை கிராம மக்கள் மீழ்குடியேற்றப்பட்டார்கள்.
12 வருடம் கடந்தும் இந்த கிரம மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகிடைக்க வில்லை. வாகரை இராலோடை பிரதேசத்திலே ரதிர்சினி வசிக்கும் வீட்டை எம்மால் அவதானிக்க கூடியதாகயிருந்தது. அடிப்படை வசதிகளற்ற குடிசை வீட்டினுள்ளே இக் கிரம மக்கள் வாழ்கின்றனர்.

கடற்றொழிலில் ஈடுபடும் தனது கனவனோடு ரதிர்சினி வாழ்கிறார். ரதிர்சினி கூறுகையில் இந்த வீட்டில் சுனாமியின் பின் ஒரு வருடத்திற்கு பின் நாம் மீழ்குடியேறினோம் மழை பெய்தால் எங்களுக்கு இவ் வீட்டில் வசிப்பது மிகவும் சிரமம் வீட்டினுள் ஒழுக்கு ஏற்பட்டு மழை நீர் வீட்டினை முற்றாக நிறப்பி விடும் இரவு வேளைகளில் மழை பெய்தால் நானும் எனது கணவரும் நித்திரை இல்லாமல் வீதியில்தான் நிற்கிறோம், குடிப்பதற்கே நீர் இல்லாமல், மலசல வசதி இல்லாமலும் மிகவும் சிரமப்படுகிறோம். எனது கணவர் கடற்றொலிலுக்கு சென்று ஒரு நாளைக்கு 200 ரூபா அல்லது 300 ரூபா மட்டினிலேயே எமது உழைப்பு காணப்படுகின்றது. இதனை வைத்தே நாம் எமது வாழ்க்கையை நகர்த்துகிறோம்.
ரதிர்சினி மட்டுமல்ல இவ்வாறு மட்டக்களப்பு இராலோடை கிராமத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட 157 குடும்பங்கள் மீழ்குடியேற்றப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இவர்களின் கவலை நிறைந்த வாழ்க்கைக்கு இன்னும் தீர்வு என்பது கிடைக்க வில்லை. குடி நீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் இந்த மக்கள் வீட்டின் முன்பாக மழை நீரை சேகரிக்க தாங்கிகளை அமைத்துள்ள போதிலும் அதிலும் வெடிப்பு ஏற்பட்டமையினால் தம்மால் தற்போது அதை பயன்படுத்த இயலாமல் போயுள்ளதாகவும் இதனால் இவர்கள் சுமார் 1 கிலோ மீற்றர் தூரம் சென்றே குடிப்பதற்கான நீரை பெற்றுவருதாகவும் கவலை தெரிவிக்ககின்றனர்.
எமது நிலையை யாரும் வந்து கவனிப்பது இல்லை எனவும் ஒரு சில அரசியல் வாதிகள் எம்மிடம் தேர்தல் காலங்களில் வந்து உங்களுக்கான தேவைகளை நிவர்த்திசெய்து தருகிறோம் எனக் கூறிச்சென்றார்கள் ஆனால் இது வரையில் எம்மை எவரும் வந்து எம் பிரச்சினை தொடர்பில் கவணம்செலுத்தவில்லை எனவும் எனது பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்...? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.