ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவினை சிறப்பித்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று(08) ஞாயிற்றுக்கிழமை காலை விசேட ஒன்று கூடல் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றுகூடலின் போது ஜனாதிபதியின் இரண்டாவது ஆண்டுநிறைவு பிரகடனம் வாசிக்கப்பட்டது. அதன்பின்பு பிரதேச செயலாளரினால் தலைமையுரை ஆற்றப்பட்டது. இதன்போது 2016ம் ஆண்டு செய்துமுடிக்கப்பட்ட வேலைகள் தொடர்பிலும் அவற்றின் திறப்பு விழா நிகழ்வுகளை இம்மாதம் 25ம் திகதிக்குள் செய்து முடிக்க வேண்டும் எனவும் செயலாளரினால் கூறப்பட்டது.
ஒன்றுகூடலைத் தொடர்ந்து செயலக வளாகத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை ஆராதனையும் இடம்பெற்றது. மேலும் உத்தியோகத்தர்களினால் சிரமதானம் மற்றும் மரநடுகை போன்றனவும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





















