வாகரை பிரதேச செயலகத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான வருட ஆரம்ப நிகழ்வு

(கோபி) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் வருட ஆரம்ப நிகழ்வானது 02.012017 ஆம் திகதி பிரதேச செயலாளர் S.R. ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. 

தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு யுத்தத்தினால் உயிர்நீத்த படைவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்களை நினைவுகூறும் வகையில் இரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் உத்தியோகத்தர்களால் 2017ஆம் ஆண்டிற்கான உறுதியுரை வாசிக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற உத்திகோத்தர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் கடந்த 2016 ஆம் ஆண்டில் அலுவலக ரீதியாக இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு மீட்டிப்பார்கப்பட்டதோடு 2017 ஆம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வறுமை ஒழிப்பின் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த தேசிய வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு செயலக ரீதியாக மேற்கொள்ளக்கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை பிரதேச செயலாளரின் தலைமையின் கீழ் செயலக உத்தியோகத்தர்கள் சமர்பித்ததைத் தொடர்ந்து  இந் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.