உயர்தரபரீட்சையில் அகில இலங்கைரீதியில் ஒட்டமாவடி மத்திய கல்லூரி மாணவி மூன்றாமிடம் பெற்றுச்சாதனை

( ஏ.எம்.தஸ்-ரீப் , எம்.ஐ.எம். அஸ்பாக்)

தற்போது வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தரபரீட்சையில் ஒட்டமாவடி மத்திய கல்லூரி மாணவி இல்யாஸ்  பாத்திமா அரூஸா உயிர்முறைமைகள் தொழில்நுட்பபிரிவில் அகில இலங்கைரீதியில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஒட்டமாவடி எஸ்.எம்.டீ. ஹாஜியார் வீதியில் வசிக்கும் இல்யாஸ் பௌசியா தம்பதிகளின் புதல்வியான பாத்திமா அரூஸா ஆரம்பக்கல்வியை மட் பிரைந்துரைச்சேரைன அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து கல்லிப் பொதுத்தராதர சாதாரன தரம் வரை கல்வி கற்று அப்பரீட்சையில் 8A, 1C பெறுபேற்றைப் பெற்று ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் தொழிநுற்ப பிரிவில் கல்வியைக் கற்று 2016ஆம் ஆண்டு பரீட்சையில் தோற்றி உயிர் முறைமைகள் தொழிநுற்பவியல்,   தொலிநுற்ப வியலுக்கான விஞ்ஞானம், தகவல் தொடர்பாடல் தொழிநுற்பவியல் பாடங்களில் A தரம், மற்றும் பொது ஆங்கிலம் C தரமும் பொதுப்பரீட்சையில்  57 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.


இவரின்  திறமையைப் பாராட்டி இன்று காலை கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி புதிய மடி கணணி ஒண்றை மாணவியின் இல்லத்திற்கு சென்று வாழத்துக்கூறி அன்பளிப்புச் செய்தார்.

இத்துடன் கல்குடா ஐ.தே.க அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எல்.டி புர்கான் மாணவியின் இல்லத்திற்கு சென்று அன்பளிப்பு பொருள் வழங்கி வாழ்த்திச் சென்றார்.

இந்த பெறுபேறு பற்றி மாணவியின் தந்தை கருத்து வெளியிடுகையில், தனது புதல்வி பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் சாதாரண குடும்பத்தைச்சேர்ந்த கூலி வேலைசெய்யும் எனது குடும்பத்தில்எனது மகள் அகில இலங்கைரீதியில் மூன்றாமிடத்துக்கும் மாவட்டத்தில் முதலாம் இடத்துக்கும் . பரீட்சைப்பெறுபேற்றைப்பெற்றது. மிக்க மகிழ்ச்சியைத்தருகின்றது .இதற்கு வழிசெய்த வல்லனாயனுக்கும் .பாடசாலை அதிபர்இஆசிரியர்களுக்கும்இபிரத்தியேக கல்விக்கு வழிசெய்த ஆசிரியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி பாராட்டுகின்றேன்

குறித்த மாணவிகருத்துவெளியிடுகையில் :- நான் எதிர்பார்த்தவாறு பெறுபேறு கிடைத்ததற்கும் கிழ்ச்சியடைகின்றேன்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இந்த பெறுபேறுகிடைத்தமைக்கு வழிசெய்தவல்லனாயன் அல்லாஹ்வுக்கும் நன்றிசெல்வதுடன் ஊக்குவித்த எனது பெற்றோர், பாடசாலை அதிபர்கள் .கற்பித்த ஆசிரியர்கள் இன்றுஎனது இல்லம்வந்து நேரில்வாழ்த்துக்கூறியும் அன்பளிப்புக்களை வழங்கியவர்களுக்கும் நன்றி பாராட்டுகின்றேன்

எதிர்காலத்தில் இனஇமத வேறுபாடுகளின்றி இன்னாட்டுமக்களுக்கு பணிகளைசெய்வதே எனது நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.



 .