வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகரவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி; இன்று (31) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
பல்கலைக்கழக வளாக முன்றலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், லஹிரு வீரசேகரவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினர்.
அண்மையில் இடம்பெற்ற கல்வியை விற்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இவர் நிபந்தனையை மீறிக் கலந்துகொண்டபோதே கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அனைத்துப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகரவுக்கு எதிராக இடம்பெற்று வரும் வழக்கு ஒன்றில்; பிணை வழங்கியபோது, எதிர்ப்பு போராட்டங்களை தவிர்க்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டது.












