ஆலையடிவேம்பில் மருத்துவச் சிகிச்சைகளுக்கான பிரயாணக் கொடுப்பனவுகள் வழங்கிவைப்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பும் (SWOAD) ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடைமுறைப்படுத்திவருகின்ற புலம்பெயர் தொழிலாளர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச்சென்ற தொழிலாளர் குடும்ப அங்கத்தவர்களின் பாரதூரமான நோய்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும்பொருட்டு வழங்கப்படும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (04) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்திப் பிரிவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவரோடு உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரனும் இணைந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்ட 2 பயனாளிகளுக்குக் குறித்த கொடுப்பனவுகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பின் சார்பில் கள இணைப்பாளர் எம்.புஸ்பராணியுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகளின் கிராமப் பிரிவுகளுக்கான கிராம உத்தியோகத்தர்களும், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.