மட்டக்களப்பு தாண்டவன்வெளி சிவில் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் கிராமசேவையாளர் கௌரவிப்பு


(சிவம்)

கிழக்கு மாகாணத்தில் முதன்மைக் குழுவாக தெரிவு செய்யப்பட்ட தாண்டவன்வெளி சிவில் பாதுகாப்புக் குழுவினர் இருவர் மற்றும் கிராமசேவையாளர் இருவர் உட்பட நான்கு நபர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (15) தாண்டவன்வெளி பேடினன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு தலைவர் ஸ்ரீபன் ராஜன், தாண்டவன்வெளி சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர் த. குகதாசன், தாண்டவன்வெளி முன்னாள் கிராம சேவையாளர் த. பத்மநாதன் மற்றும் தற்போதைய கிராம சேவையாளர் இ.பிரதீஸ்காந் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

பூம்புகார் இந்து கலாசார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மன்றத்தின் போசகர் வ. பஞ்சலிங்கம் வரவேற்புரையும், பொருளாளர் கா.சிவலிங்கம் தலைமையுரையையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் நடனம் மற்றும் கவிஞர் காசியானந்தனால் எழுதப்பட்டு இசையமைப்பாளர் ஜீவம் ஜோசப்பினால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட 'மீன் மகள் பாடுகின்றாள் வாவி மகள் ஆடுகின்றாள'; பாடலை சதாநாதன் நேசிகன் பாடி சபையோரை மகிழ்வித்தார்.


கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அரசரெட்ணம், மட்டக்களப்பு பிரதம பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி சி.ஐ. திகாவத்துர உட்பட பலர் கலந்து கொண்டனர்.