-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கில் கடந்த 5 தினங்களாகப் பெய்து வரும் கன மழையின் காரணமாக சகல விதமான கட்டுமானப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.
ஆயினும், மழையினால் சேதம் ஏற்படாத உள்ளக கட்டுமானங்கள் ஓரளவு இடம்பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய, நடுத்தர மற்றும் சிறிய வீதி அபிவிருத்தி, கட்டிட நிருமாணங்கள், வீடமைப்பு, பாலங்கள் நிருமாணிப்பு உள்ளிட்ட இன்னும் பல வெளிப்புற, கள அபிவிருத்திப் பணிகள் முடக்கம் கண்டுள்ளதாக கொந்தராத்துக் காரர்கள் தெரிவித்தனர்.
கடந்த நொவெம்பர், டிசெம்பரில் பொய்த்துப் போன எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி தற்போது அறுவடைக் காலம் நெருங்கியுள்ள வேளையில் கிடைத்து வருகின்றது.
கிழக்கில் பரவலாக தற்போது அடைமழை பெய்து வருகின்றது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













