கடந்த ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் இடம்பெற்ற நூல் வௌியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வீரம், விளையாட்டு, சிகிச்சைமுறைகள்,கலைகள் உள்ளிட்ட பல சிறந்த வழிமுறைகள் இந்து மதத்தில் பொதிந்துள்ளது.
எழுத்துருவாக்கம் தற்போது குறைந்துகொண்டு செல்கின்றது. தற்போதய இளம் சமுதாயத்தினர் குறிப்பாக இளைஞர்கள் வாசிப்பு எனும் போக்கை விட்டு நகர்ந்து செல்லும் போக்கினையும் காணக்கூடியதாகவுள்ளது.
மக்களிடையே இலத்திரணியல் என்கின்ற விடயம் அல்லது அதுசார்ந்த தாக்கங்கள் பல்வோறுபட்டவைகள் எங்களுடைய இளைஞர்களையும் மாணவர்களையும் பாதித்துக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறானவர்களை எழுத்தின் பக்கம் திருப்ப வேண்டும் வாசிக்க வைக்க வேண்டும் இதற்கான பங்களிப்பை இன்று செம்மொழிப்புலவர் அருளம்பலம் செய்துகொண்டிருக்கின்றார்.
நான் பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் என்றவகையிலே பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மாகாண ரீதியாக கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்ற எழுத்தாளர்களுடைய நூல்களை வருடாந்தம் கொள்வனவு செய்கின்றது. முன்னைய ஆண்டுகளிலே வௌியிடப்பட்ட புத்தகங்கள் மறு ஆண்டிலே கொள்வனவு செய்யப்பகின்றது.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு எழுத்தாளர்கள் தங்களது எழுத்துக்களை பதிப்பதற்கு எத்துருவாக்கி நூல் வடிவிலே கொடுப்பதற்கு கஸ்டப்படுகின்ற எழுத்தாளர்களுக்கு நூல்களை உருவாக்க பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உதவியளிக்கின்றது என்பதனை இவ்விழான்போது தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஒரு சமுதாயத்திலே வாழ்கின்ற நாங்கள் குடும்பப் பொறுப்புக்கு அப்பால் சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும். மற்றவர் நமக்கு செய்யவேண்டும். இங்கு நூலாசிரியர் கூறியது போல், 'நாடென்ன செய்தது நமக்கு என கேட்பதை விடுத்து நாம் என்ன செய்தோம் நாட்டுக்கு' என்பது போல் பிறரிடமிருந்து எதிர்பாக்காமல் நாம் நல்ல காரியங்களை செய்யவேண்டும்.
.












