(வாழைச்சேனை நிருபர்)கிரான் கோறளைப்பற்று தெற்கு பிரதேச சம்மேளனத்தின் வழிகாட்டலில் வாகனேரி காமாட்சி இளைஞர் கழகத்தினால் தைப் பொங்கல் விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணப்பிள்ளை கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கி.சேயோன் இளைஞர் சேவை அதிகாரி த.விந்தியன் பிரதேச சம்மேளன தலைவர் கோ.தினேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.
















