முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நிலைபேறான அபிவிருத்தி திட்ட அங்குராப்பணம்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நிலைபேறான அபிவிருத்தி திட்ட அங்குராப்பண நிகழ்வு நேற்று(19) வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தினால் பாடசாலைகள் ரீதியிலும் முன்னெடுக்கப்படும்  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சித் திட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.


குறித்த நிகழ்ச்சித்திட்டனுள், உணவும் போசாக்கும், சுற்றாடல் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, சிறு நீரக நோய்களை தடுத்தல், பிள்ளைகளைப் பாதுகாப்போம் போன்ற தேசிய திட்டங்கள் அடக்கப்பட்டுள்ளன.

இதன்போது இந்நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க, மாணவர்களிடையே அமைக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு சின்னமும் சூட்டப்பட்டன.

மேலும் மரநடுகை, சூழலைப் பாதுகாப்போம் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஹரிகரராஜ், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றார் அபிவிருத்திச்சங்க செயலாளர், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.