( வாழைச்சேனை நிருபர்)வாகரை பிரதேசத்தில் உள்ள குஞ்சன் கல் குள கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசிகளின் பிள்ளைகளின் எதிர் கால கல்வி வளர்சிக்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஆதிவாசிகளின் தலைவர் எஸ்.வேலன் என்பவர் மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் வே.மகேஸ்வரனிடம் இது தொடர்பான வேண்டுகோளினை விடுத்திருந்தார்.
இதனையடுத்து இன்று திங்கள்(9) கிழமை மாலை அப்பிரதேசத்திற்கு சென்று அவற்றினை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இதன்போது ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பிற்கான தவிசாளர் வீ.கே.லிங்கராசவும் கலந்து கொண்டார்.

















