(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளைக் கோட்டம் அண்மையில் வெளியான உயர்தரப்பரீட்சைப் பெறுபேற்றில் வலயத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளதாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார்.
கோட்டத்தில் உள்ள முதலைக்குடா மகா வித்தியாலயம் கணிதப்பிரிவில் 26வது மாவட்ட நிலையினையும், மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் கலைப்பிரிவில் 30வது மாவட்ட நிலையினையும் பெற்றுள்ளன. அதேபோன்று அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் புதிதாக கணிதபிரிவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அம்மாணவர்கள் அனைவரும் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினையும் பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ள ஐவரில் கலைப்பிரிவில் 82வது மாவட்ட நிலையும் பெறப்பட்டுள்ளது. அதுபோன்று கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தினைச்சேர்ந்த மாணவர்களும் சிறந்தபெறுபேற்றினை பெற்றுள்ளமையுடன் கலைப்பிரிவில் 145வது மாவட்டநிலையும் அவற்றில் பெறப்பட்டுள்ளது. முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்திலும் ஒரு மாணவி சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மண்முனை கோட்டப்பாடசாலையில் அனைத்து துறைகளிலும் கல்விகற்ற மாணவர்களில் 30க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவதற்கான தகுதியை பெற்றுள்ளதாகவும் மேலும் கூறினார்.













