பேண்தகு பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்ப நிகழ்வு.

(படுவான் பாலகன்) ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் பேண்தகு பாடசாலை அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வு மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்;ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நேற்று(19) இடம்பெற்றது. 


இந் நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர ந.தயாசீலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றம் சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர் பவாகரன் முனைக்காடு கிராம பொது அமைப்புக்களின் தலைவர்கள் ,பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பொதுமக்கள் பழைய மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். 

இதன்போது உணவும் போசாக்கும் தேசிய வேலைத் திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத் திட்டம், போதைப் பொருள் ஒழிப்பு தேசிய வேலைத் திட்டம், சிறு நீரக நோய்களை தடுக்கும் தேசிய வேலைத் திட்டம், பிள்ளைகளைப் பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம்,  போன்றன ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மேலும் மரம் நடுகை, குப்பைத் தொட்டி அமைத்தல், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், சிறுவர் பாதுகாப்பு வழிப்புணர்வு ஊர்வலம், மாணவர்கள் போக்கு வரத்து ஒழுங்குமுறை, இலைக்கஞ்சி வழங்குதல், சிரமதானச்செயற்பாடு போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மாணவர் குழுக்களும் அமைக்கப்பட்டன. அதன்படி சுகாதாரக் கழகம், சுற்றாடற் கழகம், உணவும் போசாக்கும் தொடர்பான குழு, போதைப் பொருள் ஒழிப்புக் குழு, அனர்த்தப் பாதுகாப்புக் குழு, சமாதானக் குழு, சிறுவர் பாதுகாப்புக் குழு முதலிய குழுக்கள் அமைக்கப்பட்டன. 

பேண்தகு பாடசாலை அபிவிருத்திக் குழு, உறுப்பினர்கள் அதிதிகள் முன்னிலையில் உறுதியுரை எடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மேற்படி குழுக்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களும், மாணவர்களும் உறுதியுரை எடுத்துக் கொண்டனர்.