ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கல்குடா தொகுதி மக்களுடன் கலந்துரையாடல்

 (யுதர்சினி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்  )

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் வி. மகேஸ்வரன் திங்கட்கிழமை (23.01.2017) மட்டக்களப்பு, கல்குடா தொகுதி உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
விநாயகபுரம், கல்மடு மீனவர் வீட்டுத்திட்ட கிராமம், மருதநகர், ஜீவநகர் ஆகிய கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதில் மக்கள் தமது குறைநிறைகளை எடுத்துக் கூறினர்.


குறிப்பாக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை தேவைகள், பிரச்சினைகள், மற்றும் தொழில் வாய்ப்பு தொடர்பான தேவைகள் போன்றவற்றை அமைப்பாளர் கேட்டறிந்ததுடன் அதற்கான தீர்வுகளை பெறக்கூடிய வழிவகைகளைச் செய்வதாக  மக்களிடம் தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பின்போது ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு  மாவட்ட  இளைஞர் அணியின் தலைவர் ரீ. சிவநிதன் உட்பட ஐ.தே.க ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கும்போது,
சில அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் எங்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கு சில வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்பு எங்களை கண்டு கொள்ளாமல் விடுகிறார்கள் என்றனர்.
இதன்போது மக்களால் தமது பிரதேச தேவைகள் குறித்த வேண்டுகோள் கடிதமும் அமைப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.