இந்தப் பிரதேச மண்ணில் பிறந்த இந்த நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் ஒரு காணித்துண்டு இருக்க வேண்டும். அது அவர்களது உரிமையாகும் என கிழக்கு மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தின் காணி ஆணையளார் டி.டி. அனுர தர்மதாஸ தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது பற்றி மேலும் கூறிய அவர், இந்தப் பிரதேச மண்ணில் பிறந்த அனைவருக்கும் ஒரு காணித்துண்டு இருக்க வேண்டும் என்பது முக்கியமான விடயம்.
அது ஒவ்வொரு பிரஜைகளின் உரிமையும் கூட. அந்தக் காணித்துண்டுக்கு எந்தவொரு சச்சரவும் பிணக்குமற்ற உரிமையாளராகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்றும் விரும்புவதிலும் தவறேதுமில்லை.
சமீபத்தில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் நடாத்தப்பட்ட காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான விசேட நடமாடும் சேவையின்போது பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு காணிப் பிரச்சினை இருப்பதாகக் கூறி அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக திரண்டிருந்தனர்.
நாட்டில் ஏனைய இடங்களில் காணிப் பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்ட அதேவேளை, இந்த மாகாணத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்த யுத்த சூழ்நிலை காரணமாக காணிப் பிணக்குகள் நீண்டகாலமாக கிடப்பில் இருந்து வந்ததன் விளைவே இப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் காணிப் பிணக்குகளுடன் அலைவதற்குக் காரணமாகும்.
பலர் நீண்டகாலமாக தாம் வாழும் காணியில் உரித்தாவணம் எதுவுமின்றியும் வாழ்கின்றார்கள், இன்னும் பலர் தமது பிள்ளைகளுக்கு காணிகளைப் பங்கிட்டுக் கொடுக்க விரும்புகிறார்கள்.
இவ்வாறு பல்வேறு வகையான காணிப் பிணக்குகள் இருக்கின்றன.
இன்றைய நல்லாட்சி அரசாங்கம் காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைத்து மக்களை நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும் என்பதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.
அந்த வகையிலேயே அவர் மாகாண காணி நிருவாகத் திணைக்களத்திற்கு ஆலோசனை மற்றும் வழி காட்டல்களை வழங்கி வருவதன் ஒருபடி முன்னேற்றமாகவே காணி இடம்பெயர் சேவைகளை கிழக்கு மாகாணத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டது. என்றார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












