கதிரவெளி பொதுநூலகத்திற்கு தேசியவிருது

 (ஜெ.ஜெய்ஷிகன்) வாகரைப் பிரதேசபைக்குட்பட்ட பொது நூலகங்களில் ஒன்றான கதிரவெளி பொது நூலகம் கடந்த ஆண்டு தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் தேசிய ரீதியாக  நூலகங்களுக்கிடையே தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில்  2015இல் அகில இலங்கை ரீதியில் 3ம் இடத்தை தட்டிக் கொண்டது.

 வருடா வருடம்; தேசிய நூலக ஆவணாக்கல்கள் சபை நூலகங்களுக்கிடையேயான போட்டி நிகழ்சிகளை நடாத்தி வருகின்றது. இப் போட்டிகளில் கடந்த வருடம் கலந்து கொண்டு தேசிய ரீதியாக 3ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. பிரதான விருது வழங்கும் வைபவம் கொழும்பு தேசிய நூலக ஆவணாக்கல் சேவைகள்  கேட்போர் கூடத்தில் கடந்த 14.12.2016ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


அதே போன்று 2014ஆம் ஆண்டு தேசிய நூலக ஆவணாக்கல் சபையால் நூலகங்களுக்கிடையே தேசிய வாசிப்பு மாதம் 2014இல் நடாத்தப்பட்ட போட்டியிலும் மாவட்ட ரீதியாக 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்;டமை அதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.