பட்டிப்பளைப் பிரதேச செயலக ஊழியர்களின் முதல்நாள் கடமை ஆரம்ப நிகழ்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் 2017ம் ஆண்டிற்கான கடமையை இன்று(02) ஆரம்பித்தனர்.

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் செயலகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு, அரசசேவை சத்தியப்பிரமாணமும் ஊழியர்களினால் எடுக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டது. மேலும் புதிய ஆண்டில் சிறந்த சேவைகளையும், செயற்பாடுகளையும் எல்லோரும் இணைந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் செயலாளரினால் கூறப்பட்டது.