மலர்ந்துள்ள
2017 ஆம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த புதுவருட விசேட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன்
தலைமையில் இன்று (01) காலை சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
பிரதேச
செயலக வளாகத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை
வழிபாடுகளுடன் ஆரம்பமான வைபவங்களில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து
சிறப்பித்திருந்தனர். பூஜை வழிபாடுகளை ஆலய குரு சிவஸ்ரீ பிருந்துஜன் சர்மா
சிறப்புற நடாத்தியிருந்தார்.
பூஜையைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பனங்காடு கிராமத்தில் மணமுடித்துத் தற்போது நோர்வே
நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு தொழில் புரிபவருமான லூமின் மரியதாஸ் ஹட்சன் என்ற தனவந்தரால் அருள்மிகு
ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்துக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்ட நிகழ்வு
இடம்பெற்றது. தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய
பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களையும்
ஒலிபெருக்கி சாதனங்களைக் கையளித்த குறித்த தனவந்தருக்குத் தனது நன்றிகளையும்
தெரிவித்திருந்தார். அதனையடுத்து இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சமுக பராமரிப்பு
நிலையத்தின் வார இறுதிநாள் இரவுக் காவலாளிக்கான அமைய அடிப்படையிலான நியமனம் வழங்கும்
நிகழ்வில் இ.வித்தியானந்தன் குறித்த நியமனத்தைப் பிரதேச செயலாளரிடமிருந்து பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.
அடுத்து
இடம்பெற்ற புதுவருடச் சம்பிரதாயமாகக் கைவிசேடம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் பிரதேச
செயலக உத்தியோகத்தர்கள் தம்மிடையேயும் பிரதேச செயலாளரோடும் புதுவருட
வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு அவரிடமிருந்து ஆசீர்வாதத்தையும் கைவிசேடத்தையும்
பெற்றுக்கொண்டனர்.












