மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளைத் தவிர்க்க 30பாலங்கள்.

மாகாண உள்ளுராட்சி அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 கிராமியப்பாலங்கள் எதிர்வரும் 2017ஆம் வருடத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ளன என்றும் மாவட்டத்தின் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த 30 பாலங்களும் மக்களின் போக்குவரத்துப்பிரச்சினைகளைக் குறைக்கும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.


இந்தப் பாலங்களுக்கான வடிவமைப்பு வேலைகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும், அவற்றில் இரண்டுக்குரிய வடிவமைப்பு வேலைகள் யாவும் நிறைவடைந்துள்ளதுடன் அவற்றின் கட்டுமான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அந்த வகையில் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவின் வக்கியல்ல கிராம சேவையாளர் பிரிவின் கண்ணபுரத்தில் 3 பாலங்களும், ராணமடுவில் இரண்டு பாலங்களும்,  வக்கியல்லவில் ஒரு பாலமுமாக மொத்தமாதக 6 பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கெவுளியாமடு கிராம சேவையாளர் பிரிவின் கறுவாச்சோலை பாலம், கரடிப்பூவல் பாலம், புத்தரகுளப் பாலம், எரிக்கில மடு பாலம்,கட்டையடியோடை பாலம் ஆகிய ஐந்து பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மக்களது போக்குவரத்துக்குச் சிரமமாக இருந்த இணைந்த பாலம் எனப்படும் 9ஆம் கொலனிப் பாலம், வவுணதீவு சிறி முத்து மாரியம்மன் கோவில் வீதிப் பாலம், ஒத்தியன்காடுப் பாலம், ம்சார சபைக்குரிய மின்சாரத்தூண்கள் ஏற்றிச் செல்லப்பட்ட வேளை கடந்தவருடத்தில் உடைந்த புளியடி மடு பாலம், தும்பாலைப் பாலம், காஞ்சங்குடாப் பாலம் ஆகிய பிரதேசங்களின் 7 பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

அதே போன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடற்கரை வீதியிலுள்ள பாலமீன்மடு, கும்புளா மடுப்பாலம் ஆகிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலுக்கு பிரதேசத்தின் குரக்காமடுப் பாலம், தளவாயிலிருந்து சவுக்கடிக்குச் செல்லும் பாதையிலுள்ள தளவாய் பாலம், வெலிக்காகண்டி பாலம், வெள்ளையாத்துப்பபாலம் எனப்படும் வேப்பவெட்டுவான் பிரதேசத்திலுள்ள 4 பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் இலுமிச்சையடிக் குடா பாலம், கல்லடி வெட்டைப் பாலம், பெரிய நுரைச்சோலை பாலம் ஆகியனவும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ரிதிதென்ன - ஜெயந்தியாயப் பாலமும், கோரளைப்பற்று வடக்கில் புனானை கிடாச்சிமடுப் பாலமும் அமைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்த 30 பாலங்களுடைய அமைப்பின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களின் மக்களின் போக்குவரத்துக்கென எதிர் நோக்கிவந்த பிரச்சினைகள் பெரும் பாலமு; குறைக்கப்படும். இப்பாலங்களினை அமைப்பதற்கென சுமார் 600 மில்லியன் ரூபா மத்திய அரசாங்கத்தின் மாகாண உள்ளுராட்சி அலுவல்கள் அமைச்சினால் செலவீடு செய்யப்படவுள்ளது.

கிhமியப்பாலங்களை அமைக்கும்2016- 2017ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் மொத்தமாக 562 மீற்றர் நீளமான பாலங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.