வவுணதீவு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழாவுடன் மழையும் பொழிந்தது! - Video

( ஆயித்தியமலை நிருபர்)
 மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கலாசார அதிகாரசபையும் சமூக மட்ட அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த பொங்கல் விழா இன்று 20ஆம் திகதி மிக சிறப்புடன் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பொங்கலுக்கான பொருட்கள் எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பொங்கல் விழா ஆரம்பமானது.

தைத் திருநாளில் மக்கள் அனைவருக்கும் நன்மையளிக்க வேண்டுமெனவும் தேவைக்கேற்ப நாட்டில் மழை பொழிய வேண்டும் எனவும் இப் பொங்கல் விழா இடம்பெற்றது.

பிரதேச செயலக தினைக்களப் பிரிவுகளாலும் கிராம மட்ட அமைப்புக்களாலும் இதன்போது 35 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் இடம்பெற்றது.
பொங்கல் விழாவின்போது பாரம்பரிய கலை நிகழ்வுகளுக் இடம்பெற்றதுடன் சில மாணவர்களுக்கு கல்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இப் பொங்கல் விழா நிறைவின்போது மழையும் பெய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.