பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு ராகிங் தொல்லை


  பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு  பல்கலைக் கழகங்களிலுள்ள சிரேஷ்ட   மாணவர்களால்  ராகிங்  என்ற பெயரில்  பகிடிவதை , தொல்லை  கொடுப்பதாக  பெற்றோர்கள்  தெரிவிக்கின்றனர் .


பகிடிவதை காரணமாக பதின்மூன்று ஆண்டுகள் ஒவ்வொரு வருடமாக கட்டியெழுப்பிய எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாக விடும் நிலைமை ஏற்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு

தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ள மாணவ மாணவிகளின் தொலைபேசிகளுக்கு தமது தொலைபேசி இலக்கங்களை அனுப்பி அவற்றுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு  தாம் வற்புறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அழைப்பை ஏற்படுத்தினால் சிலர் மரியாதையாக பேசினாலும், பலர் தம்மை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும்   அசிங்கமான வார்த்தைகளை பிரயோகிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது பற்றி பெற்றோரிடமோ அல்லது வெளியிலோ தெரிவிக்க வேண்டாம்     என பயமுறுத்துவதாகவும் அறியப்படுகின்றது. மிகவும் வறுமையான நிலையிலும் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் படித்து தெரிவாகியுள்ள , தொலைபேசி இல்லாத மாணவிகளை தொடர்பு கொண்டு, உடனடியாக தொலைபேசி கொள்வனவு செய்யுமாறும்
 எனவும்அச்சுறுத்துவதாகவும் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பல மாணவியர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதோடு பெற்றோர் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

பகிடிவதை காரணமாக ஏற்படும் பிரதான பிரச்சினைகளில் மன அழுத்தம் முக்கியமானது. ஆளுமைக் குறைபாடு, ஏற்படுதல், சிறுநீரகம் செயலிழத்தல் இதய செயற்பாடு சம்பந்தமான பிரச்சினை ஏற்படல், அதிர்ச்சிக்கு உள்ளாதல், காயம் ஏற்படுதல், தற்கொலை செய்து கொள்ளல் என்பனவெல்லாம் மன அழுத்தத்தின வெளிப்பாடுகளாகும்.

பகிடிவதை காரணமாக கூடுதலாக ஏற்படுவது உளரீதியான தாக்கமாகும். இது பெரும்பாலும் பகிடிவதைக்குட்பட்ட நபரின் வாழ்க்கை பூராவும் ஏற்படக்கூடிய ஒரு நிலையாகும்.

மன அழுத்தம் காரணமாக ஏற்படும் கடும் தாக்கம் இறுதியில் பாரிய விளைவை ஏற்படுத்தும். இது சிலருக்கு வாழ்க்கை பூராவும் இருக்கலாம். கல்வியை சீர்குலைக்க கூட இந்நிலைமை காரணமாகலாம்.


பல வருட காலமாக கஷ்டப்பட்டு எதிர் காலத்தைப் பற்றி பலவித எதிர்பார்ப்புக ளுடன் உயர் கல்விக்குச் செல்லும் பிள்ளைகளின் எதிர்பார்ப்பை குழி தோண்டிப் புதைப்பதற்கு இடமளிக்காமல் பார்த்துக்கொள்ளல் மாணவர் சமுதாயத்தின் பாரிய பொறுப்பாகும்.


தொடர்புகளுக்கு  :  info@battinews.com