சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு 30,000 யூரோக்கள் இழப்பீடாகவும், 4770 யூரோக்கள் செலவுத் தொகையாகவும் நஸ்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான இவர், கடந்த 2009ம் ஆண்டு அதில் இருந்து விலகி, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சுவிஸர்லாந்திடம் தஞ்சம் கோரினார்.
இந்தநிலையில், 2013ம் ஆண்டு அந்த நாட்டு அதிகாரிகள் அவரை நாடுகடத்தினர்.
இதனையடுத்து மீளவும் இலங்கை வந்த அவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்ததாக, ஜெனிவா மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நீதிமன்றத்தில், குறித்த இலங்கை அகதி குறிப்பிட்டிருந்தார்.
2013 ஆண்டும் ஏப்ரல் 6 ஆம் திகதி குறித்த போராளி தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியிடமும், ஐ.நா மனித உரிமை அதிகாரியொருவரிடமும் அவர் அங்குள்ள நிலைமைகளைக் கூறமுடியாத ஒரு இக்கட்டான சூழலில் இருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த வழக்குக் குறித்து நேற்றையதினம் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ள மிக முக்கியமான தீர்ப்பொன்றில், குறித்த நபர் ஸ்ரீலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதைக்குள்ளாவார் என்று கூறியிருந்தமைக்கு மத்தியிலும், திருப்பி அனுப்பப்பட்டு அங்கு சித்திரவதைக்குள்ளாகியிருக்கிறார் என்றும் இந்த அபாயங்கள் சுவிற்சர்லாந்து அறிந்துவைத்திருக்கவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த வகையில் சித்திரவதை இடம்பெறும் நாடொன்றிற்கு அபாயங்களுக்கு மத்தியில் புகலிடக்கோரிக்கையாளரொருவரைத் திருப்பி அனுப்பியிருப்பதனூடாக சுவிற்சர்லாந்து மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையினை மீறியிருக்கிறது என்று தீர்ப்பளித்திருக்கிறது.
இவருக்கு ஏற்பட்ட இழப்பிற்காக சுவிற்சர்லாந்து அரசு இவருக்கு 30,000 யூரோக்கள் இழப்பீடாகவும், 4770 யூரோக்கள் செலவுத் தொகையாகவும் வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.