(கோபி)
சிவாத்மசீலர்களே!
காயத்ரி சித்தர் முருகேசுசுவாமிகளின் திருவருட் கருணையால் நிகழவுள்ள சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும், மட்டக்களப்பு – கல்லடி பிராந்திய நீர்ப்பாசன திணைக்களத்தினால் வெகு சிறப்பாக நிகழவுள்ளது. அன்பர்கள் அனைவரும் சித்தமல மறுக்கும் சிவராத்திரி பூஜைகளில் கலந்து ஆத்ம இன்பம் பெறுவீர்களாக.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேடமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்களும், இலங்கையிலுள்ள புண்ணிய தீர்த்தங்களும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள திருக்குளங்களின் அருள்நீர்களும், மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்திலிருந்து மாலை 4.00 மணிக்கு ஸ்ரீசப்தரிஷி வளாக காயத்ரி தேவஸ்தானத்திற்கு ஏந்திவரப்பட்டு லிங்க மூர்த்திக்கு அபிடேகம் செய்யப்படும். தீர்த்த ஊர்வலத்தில் சைவ அடியார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து அருள்பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.















