போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 69வது சுதந்திர தின நிகழ்வு

(எஸ்.நவா)


போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 69வது சுதந்திர தின நிகழ்வு வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் (4) சனிக்கிழமை மு.ப. 09 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.என் வில்வரத்தினம் அவர்களால் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து மண்டபத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி மன்றத்தினால் வறிய பாடசாலை மாணவர்களுக்கு சப்பாத்து மற்றும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது.


 அத்துடன் சிரமதானப்பணிகள் 35மேற்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்களும் இணைந்து இரத்ததானங்களும் வழங்கிவைக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது
இந் நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் .என் வில்வரத்தினம் பிரதேச சுகாதார அதிகாரி Dr.வீ.குணராசசேகரம் பிரதேச சபையின் செயலாளர் திரு எஸ்.ஆதித்தன் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் I P ஜயுப்; இராணுவ பிரிவின் மேஜர் ரோகண சாமிஜ மற்றும் திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஏனையோர்களும் கலந்துகொண்டனர்.