மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் உணவகத்தை திறந்துவைத்தார்.
சுயதொழிலை ஊக்குவித்தல் மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பின் பல இடங்களில் 'வீ எபெக்ற்' ( We Effect ) நிறுவனத்தின் நிதி உதவியுடன் காவியா பெண்கள் அமைப்பினால் இப் பாரம்பரிய உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மற்றுமொரு உணவகமாக இன்றையதினம் உன்னிச்சை கிராமத்தில் திறந்துவைத்து ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், வவுணதீவு-உன்னிச்சை பிரதேச இராணுவ கட்டளைத் தளபதி ஏ.டி.றொட்டிகோ, 'வீ எபெக்ற்' நிறுவனத்தின் இணைப்பாளர் ரி.மயூரன், காவியா பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி. யோ.அஜித்குமார், 'வீ எபெக்ற்' நிறுவனத்தின் நிருவாக உத்தியோகத்தர் பிரசாத், வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இளங்கோ,உதவி பிரதேச யெலாளர் எஸ்.ராஜ்பாபு பிரதேச சபை செயலாளர் ரி.புத்திசிகாமணி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












