
கதிரவெளி விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கு நேற்று (14) பாடசாலை மண்டபத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
பாடசாலை கல்வி முடித்த மாணவர்களுக்கும் உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் தங்களுக்கான தொழிலை தாங்களே தேடிக்கொள்வதற்கு ஏற்ற வழிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கில் கற்றல் முறைகள், NVQ பற்றிய அறிவு, தொழிலின் தன்மை மற்றும் தொழிற்பயிற்சி நெறி பற்றிய விளக்கம் போன்ற விடயங்கள் அடங்கிய விளக்கங்கள் வளதாரிகளால் அளிக்கப்பட்டது.
மேற்படி கருத்தரங்கானது பாடசாலை அதிபரின் அனுமதிக்கிணங்க எஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையில் HRDO, மற்றும் சமூதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர் ஆகியோரால் கருத்தரங்கு விரிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் இக்கருத்தரங்கில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வளதாரிகள் மற்றும் எஸ்கோ நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.














