கடந்த காலத்தில் இன மத மொழி என்பவற்றைக் கடந்து உண்மையான ஊடகத்தின் குரலாக ஒலித்தவர்கள், அரசாங்கத்தின் வாங்கு பொருளாக வாங்க முடியாதவர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஊது குழலாக இருக்க முடியாதவர்களை குறிபார்த்து சுட்டுக்கொலை செய்திருக்கின்றார்கள். என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 11ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக செயற்பாட்டுக்கான சுதந்திர இயக்கம் ஆகிய அமைப்புக்களால் மட்டக்களப்பில் ஓழுங்கு செய்த நினைவஞ்சலி மற்றும் அஞ்சலி கானயீர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விடயம் ஒருபக்கமிருக்க, அவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி இன்னும் விடியலாகத் தெரியவில்லை. நிச்சயமா கடந்த காட்டாட்சி காலத்தில் அதிகம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றபர்கள். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையிலும் நல்லாட்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலம்தான் இந்த நல்லாட்சி மாற்றத்திற்க தமிழ் முஸ்லிம் சமுகம் மட்டுமல்ல நீதியை விரும்புகின்ற சிங்கள சமுகங்களும் கூட அனுமதி வழங்கியிருந்தது.
எனவே இன்றைய நிலையில் ஒரு நல்லாட்சி நடை பெறுகின்றது என்பதை உறுதிப்படுத்துவாதாக இருந்தால் படுகொலைக்குள்ளான ஊடகவியலாளர்களது நியாயங்கள் நீதிகள் நிரூபிக்கப்பட வேண்டுமாகவிருந்தால் கொலைகளைச் செய்த இக் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தண்டனைகள் வழங்கப்படாமல் குற்றவாளிகள் ஒளிந்திருக்கும் வரைக்கும் இங்க ஜனனாயகத்தின் குரலாக ஒலிக்கின்ற ஊடகவியலாளர்கள் தங்களது குரல்களை ஒலிப்பதற்குப் பயந்துகொண்டிருக்கின்ற சூழ்நிலை இருந்துகொண்டே இருக்கும்.
கடந்த காலத்தில் இவ்வாறான கண்டனக் கருத்துக்களை வெளியிடுவதற்க ஒரு கடுமையான போர்வை போடப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் அந்தக் கருத்துக்களை சொல்லக் கூடிய ஒரு சுதந்திரமான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த சூழல் எற்பட்டால் மட்டும் போதாது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி நியாயம் வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மறைந்திருக்கம் திரைகள் நீக்கப்பட வேண்டும் அவர்கள் எந்த அந்தஸ்துள்ளவர்களாக இருந்தலும் சரி எந்த ஆட்சியாளராக இருந்தாலும் சரி சகலரையும் நீதியின் முன்னால் நிறுத்தி ஜனனாயகத்தின் குரல் வலிமை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற காட்டாட்சிக்கு உறுதுணையாகவிருந்த கொலையாளிகள், குண்டர்கள் நீதியின் முன்னால் கொண்டுவரப்பட்டு அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படுகின்றபோது இங்கு நடைபெறுகின்ற ஆட்சி நல்லாட்சி என்பதை மக்கள் நம்பக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் தனி மனிதர்களல்ல அவர்களுக்கம் குடும்பங்கள் உண்டு அந்தக் குடும்பங்களுக்கு அரசாங்கள் உதவிகளையும் நிவாரணங்களையும் அளிக்க வேண்டும்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்களின் ஒற்றுமையைக் காண்கின்றேன். இங்க தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் எல்லோரும் ஒன்றாக இணைந்த ஊடக தர்மத்தை பாதுகாப்பதற்காக கைகோர்த்துள்ளனர் இவர்களின் போராட்டத்திற்கு அரசாங்கள் விரைவில் பதில் வழங்க வேண்டும். எனத் தெரிவித்தார்.












