(ஜெ.ஜெய்ஷிகன்)விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரிகளின் குடும்ப உறவினர்களுக்கான விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று(14) காலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன், கல்லூரியின் அதிபர் அ.ஜெயஜீவன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நேசராஜா, சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், வாழ்வின் உதயம் அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம், விளையாட்டு உத்தியோகத்தர் சங்கீதா, செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கும் பாடசாலை மாணவர்களுக்குமான கரப்பந்தாட்டம், கிடுகிழைத்தல், குண்டு போடுதல், தேங்காய் துருவுதல், மிட்டாய் ஓட்டம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது. வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கிராமசேவகர்களான குணபாலன் மற்றும் கஜேந்திரராஜா ஆகியோர்களினால் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.



























