முதுபெரும் கலைஞர் கற்பகன் தம்பிராஜா நினைவாக நவீன நாடகம் இராவணேசன் அரங்கேறுகிறது. இந் இநிகழ்வு தொடர்பில் - பேராசிரியர் மௌனகுரு எமது ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத் தயாரிப்பான கூத்துருவிலமைந்த நவீன நாடகமான இராவணேசன் 04.02.2017 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு காலம் சென்ற கூத்துக் கலைஞர் கற்பகன் தம்பிராஜா அவர்களின் 25 ஆவது சிரார்த்த தினத்தை நினைவுகூரும் முகமாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் மேடையேறுகிறது.
கற்பகன் தம்பிராஜா ஆசிரியர் 1970 களில்கூத்துக்கலையை மாணவர்கள் மத்தியில் பரப்ப அர்ப்பணிப்போடு பாடுபட்ட ஓர் கூத்துக் கலைஞர் ஆவர்.
பேராசிரியர் மௌனகுருவின் தலைமையில் நடைபெறும் இந்நினைவுகூர்நிகழ்வில் மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்கள் பிரதமவிருந்தினராகக் கலந்துகொள்கிறார். நினைவுப்பேருரையை பேராசிரியர் மௌனகுரு நிகழ்த்துகிறார்.
இராவணேசன்இலங்கைத் தமிழ் நாடக மரபில் முக்கியமானதொரு நாடகம் ஆகும்.
பேராசிரியர் சந்திராவின் மனமே நாடகத்தின் பாதிப்பிற்குள்ளான பேராசிரியர் வித்தியானந்தன் 1965 இல் இந்நாடகத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தயாரித்தார்.
அப்போது அங்கு மாணவனாக இருந்த மௌனகுருவை நெறிப்படுத்தி இதனை எழுதவைத்ததோடு அதில் ராவணன் பாத்திரமாகவும் நடிக்கவும் வைத்தார்.
பேராசிரியர் வித்தியானந்தன் அதனைப் பெரும்பாலும் கூத்து மரபு தழுவியே தயாரித்தார்
பேராசிரியரான மௌனகுரு 40 வருடங்களுக்குப் பிறகு 2000ஆம் ஆண்டில் இராவணேசனை நவீன நாடக நெறிமுறைகளுக்கு ஏற்ப தயாரித்தார்.
பேராசிரியர் மௌனகுரு அதனைக் கூத்து எனக்குறிபிட்டாரில்லை. கூத்தின் அடியான புதிய நாடகம் என்றே குறிப்பிட்டார்.
இந்நாடகத்தை உருவாக்க மௌனகுரு கூத்தின் நடனம், இசை என்பவற்றுடன் பரதநடனம்,கர்னாடக இசை என்பனவற்றையும், நவீன நடிப்பு முறைகளையும்,நவீன அரங்க உத்திகளையும் இணைத்துக்கொண்டார்.
பேராசிரியர் வித்தியானந்தன் மத்தளமும் தாளமுமே கூத்தில் பாவிப்பர். ஆனால் மௌனகுருவோ தவில், பறை, உடுக்கு, ஹார்மோனியம், வயலின்,தபேலா, சிம்பல் சங்கு முதலான இசைக் கருவிகளையும் இணைத்துக்கொண்டார்.
இராவணேசன் நாடகத்தை ஒரு துன்பியல் நாடகமாக்கி இராவணனை ஒரு துன்பியல் நாயகனாக்கினார். இச்சிந்தனையை மௌனகுரு பண்டைய கிரேக்க துன்பியல் நாடகங்களிலிருந்து பெற்றுக்கொண்டார்.
இவ்வண்ணம் உலகப் பரப்பின் அனைத்து விடயங்களையும் உள்வாங்கி ஒரு நவீன அரங்காக இராவணேசனை பேராசிரியர் மௌனகுரு உருவாக்கினார்.
இதனாலேயே அது தனிக் கவனம் பெற்றதுடன் இலங்கைத் தமிழ் நாடக மரபில் ஒருபுதிய போக்கையும் தொடக்கி வைத்தது. 2000ஆம்ஆண்டிலிருந்து 16 வருடங்கள் தொடக்ச்சியாக மேடையேறியும் வருகிறது.
மௌனகுருவின் இராவணேசனை இப்போது ஆறாவது தலைமுறை நடித்துக் கொண்டிருக்கிறது. இதில்நான்கு தலைமுறைகளை அவரே நெறியாள்கை செய்துமுள்ளார்.
இதனைவிட நாட்டின் பல பாகங்களிலும் இந் நாடகத்தைப் பலர் மேடையிட்டுமுள்ளனர்
இராவணேசன் ஒரு வளர் இதிகாச நாடகம் ஆகும்.
இந்நாடகம் 06.02.2017 திங்கட்கிழமை கழுதாவளை மகா வித்தியாலயத்தில் காலை 10.00 மணிக்கு மாணவர்களுக்கும் மாலை 2.00 மணிக்குப் பொதுமக்களுக்காகவும் அரங்கேற்றப்படுகிறது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












