சேவ் அக்ற் நிறுவனத்தினால் மாணவர்களுக்கும் விஷேட தேவையுடையோருக்கும் நிதியுதவி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மாணவர்களுக்கும் அதிதீவிர சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய விஷேட தேவையுடையோருக்கும் சேவ் அக்ற் நிறுவனத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளினைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் வழங்கும் நோக்கில் முதற்கட்டமாக 22 மாணவர்களுக்கு வங்கி கணக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் விஷேட தேவைக்குட்பட்ட 7 பேருக்கும் அதிதீவிர சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கப்பட்டது.


 வந்தாறுமூலை உலக தரிசன மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேவ் அக்ற் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ.சசிக்காந்தன், COO எஸ்.ஜெகதீசன், பிரதேச செயலாளர் எஸ்.உதயசிறிதர், சமூகசேவை உத்தியோகத்தர் பொ.டிமலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த உதவிகளினை வழங்கிவைத்தனர்.

உதவிய சேவ் அக்ற் நிறுவனத்திற்கு பயனாளிகளினால் நன்றிகளும் பாராட்டுதல்களும் தெரிவிக்கப்பட்டது.