மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய இராஜகோபுர நிர்மாணிப்பு ஆரம்பம்

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய இராஜகோபுர நிர்மாணிப்பின் இரண்டாம் கட்டப்பணிகள் வெள்ளிக்கிழமை 17ஆம் திகதி காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இவ் இராஜகோபுரம் மூன்றரை கோடி ரூபா செலவு மதிப்பீட்டில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களால் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இவ் அடிக்கல் வைக்கும் வைபவத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா, ஆலைய நிருவாக தலைவர் சி.ஞானப்பு மற்றும் ஆலய நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.