(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்கக் கோரியும் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட மாணவர்களினால் மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை மாலை (07.02.2017) மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து ஆரம்பமாகிய இப்பேரணி மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியூடாக மட்டக்களப்பு நகரை ஊடறுத்து கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அடைந்து வாவிக்கரையூடாக மீண்டும் சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு வந்து சேர்ந்தது.
மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்திலும் தரித்து நின்ற மாணவர்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பியவாறு தமது எதிர்ப்பிற்கான விளக்கத்தையும் பரப்புரை செய்தனர்.
மாணவர்கள் தமது எதிர்ப்பினை காட்டும் வகையில் மாறுவேடம் பூண்டிருந்ததுடன் எதிர்ப்பு சுலோகங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்கக் கோரியும் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட மாணவர்களினால் மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை மாலை (07.02.2017) மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றது.மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து ஆரம்பமாகிய இப்பேரணி மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியூடாக மட்டக்களப்பு நகரை ஊடறுத்து கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அடைந்து வாவிக்கரையூடாக மீண்டும் சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு வந்து சேர்ந்தது.