வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு இறுதி நாள் நிகழ்வு

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு இறுதி நாள் நிகழ்வு கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்தோடு அதிதிகளாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, வாழைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், கல்குடா கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான க.சுபாஸ்சந்திரன், த.தர்மபாலன், ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆ.ஜெகன், வாழைச்சேனை கிராம சேவை உத்தியோகத்தர் க.கிருஸ்ணகாந்த், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் க.ஜெகதீஸ்வரன், பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவர் பு.சுதன், வாழைச்சேனை கிராம அபிவிருத்திச் சங்க உப தலைவர் பொ.தர்மேந்திரதீசன், வாழைச்சேனை ஸ்ரீ கையலாப் பிள்ளையார் ஆலய உப செயலாளர் சி.தயாபரன் மற்றும் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் அணி நடை, உடல் பயிற்சி கண்காட்சி, வினோத உடைப் போட்டி, பழைய மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டம், பெற்றோருக்கான சங்கீதக் கதிரை, ஆசிரியர்களுக்கான மெது நடை, ஜோடியாக பலூன் உடைத்தல், மாணவர்களுக்கான ஓட்டப் போட்டி நிகழ்வுகளும் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலாம் இடத்தினை 418 புள்ளிகளைப் பெற்று எல்லாளன் இல்லமும், இரண்டாம் இடத்தினை 385 புள்ளிகளைப் பெற்று இளங்கேஸ்வரன் இல்லமும், மூன்றாம் இடத்தினை 285 புள்ளிகளைப் பெற்று இராஜ ராஜ சோழன் இல்லமும், நான்காம் இடத்தினை 270 புள்ளிகளைப் பெற்று சங்கிலியன் இல்லமும் பெற்றுக் கொண்டது.