முதியவர்களுக்கும் விசேட தேவையுடையவர்களுக்குமான உடற்பயிற்சி

(ஜெ.ஜெய்ஷிகன்)
தொற்றா நோய்களின் மூலம் ஏற்படும் பிரச்சினைகளை குறைக்கும் நோக்குடன் தேசிய உடற்பயிற்சி வாரம் இம்முறை பெப்ரவரி மாதம் 6ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை ஒழுங்குசெய்யப்பட்டு பல்வேறு குழுவினருக்கும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் உடற்பயிற்சிகளும் நடாத்தப்பட்டு வருகிறது.
இதன் 4ம் நாள் நிகழ்வு முதியவர்களுக்கும் விசேடதேவையுடையவர்களுக்குமான நாளான 10.02.2017 இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகமும், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டுவரும் கல்லடி விபுலானந்தா முதியோர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரின் வழிநடத்தலில் முதியோர்களுக்கான உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. 
இவ்வுடற்பயிற்சி நிகழ்வில் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள், கல்லடி வேலூர் முதியோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.