(ஜெ.ஜெய்ஷிகன்)
விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு வடக்கு வலயத்திற்குட்பட்ட விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட காளான் மற்றும் சோழன் அறுவடை விழா நேற்று முன்தினம் புதன்கிழமை காலை கொடுவாமடு கிராமசேவகர் பிரிவில் நடைபெற்றது.உதவி விவசாயப் பணிப்பாளரின் தலைமையில் நடைபெற்ற விழாவில் காயான்குடா விவசாய போதனாசிரியர் திருமதி.செந்தீபனின் வழிகாட்டலில் ஏற்பாடுகள் நடைபெற்றது.
பிரதேசத்தின் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தமது விவசாய உற்பத்திப் பொருட்களை அறுவடை செய்தமை குறிப்பிடத் தக்கது.குறிப்பாக காளான் உற்பத்திப் பொருட்கள் எல்லோரையம் கவர்ந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.























