(எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு வாரம் இன்று பெப்ரவரி 06-12 வரை விளையாட்டுத்துறை அமைச்சினால் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட பிரேரணைக்கமைய கௌரவ ஜனாதிபதி அவர்களது அங்கிகாரத்தின் பிரகாரம் விளையாட்டுதுறை மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரமானது இன்று பெப்ரவரி 06 தொடங்கி 12ம்திகதி வரையும் நடைபெறும் இதன்போது வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் நேற்று (06) 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் திரு என்.வில்வரத்தினம் அவர்களால் தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின் அவரின் உரை இடம்பெற்றது.
இதில் சிறுவர்கள் தொடக்கம் முதியோர்கள் வரையும் ஒவ்வொரு நாளும் இவ் உடல்பயிற்சியினை செய்வதன் மூலமும் நஞ்சற்ற உணவை உட்கொள்வதன் மூலமும் தொற்றா நோய்லிருந்து காப்பாற்றிக்கொள்ளமுடியும் எனவே அலுவலகங்கள் ; மற்றும் வீடுகளிலும் இவ்வாறான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்வரும் (08.02.2017) பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு இப்பயிற்சினை நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுஎன்பதையும் கூறிக்கொண்டார்.
இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.