கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால்; கல்குடா கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.

(சித்தா)
கிழக்கு மாகாணத்தின் ஆரம்பக் கல்வியின் அடைவ மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ.நிசாம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வலயங்கள் ரீதியாக வலய உத்தியோகஸ்த்தர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில் இன்று கல்குடா கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்/செங்கலடி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ரி.ஏ.நிசாம், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.மனோகரன், மாகாண ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.உதயகுமார், மற்றும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் என  சுமார் 180 வரை கலந்து கொண்டனர்.