கனடா மண் வாசனை அமைப்பின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு லயன் பெண்கள் கழகத்தின் ஏற்பாட்டில், வவுணதீவு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 07 பேருக்கு சக்கர நாற்காலிகளும் இருவருக்கு ஊன்று கோல்களும் வழங்கிவைக்கப்பட்டது.
கடல் கடந்து வாழும் உறவுகளின் உதவவேண்டும் என்ற நல்லெண்ணம் வீண்போகாது, கடந்த கால யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இப் பிரதேசத்திற்கு உதவிகளை வழங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் இந் நிகழ்வில் கலந்துகொண்ட மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தனது நன்றியினை தெரிவித்தார்.
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மட்டக்களப்பு மாவட்ட லயன் கழக தலைவர் எஸ்.சிறிரங்கன், மட்டக்களப்பு லயன் பெண்கள் கழக தலைவி ஜெயப்பிரபா சுரேஸ், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ் மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர், உளநல உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.












