(ஜெ.ஜெய்ஷிகன்)
முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக்
கழகத்தின் ஒழுங்கமைப்பில் பல நாட்களாக இயங்குதன்மை குறைவாக இருந்த லைற்ஹவுஸ்
இளைஞர் கழகத்தின் புனரமைப்பு கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 10ந் திகதி
முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற மட்டக்களப்பு
வாவி சூழலியல் கற்கை நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குறித்த பகுதிக்கான
இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி. பிரசாந்தினி பிரியதர்சன்,
பிரதேச
சம்மேளனத்தின் தலைவர் S. சஜித், முகத்துவாரம்
லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த. விஜயகுமார்,
பொருளாளர்
க. பிறேமன், மற்றும் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் கல்வி பிரிவின்
பொறுப்பாளர் இரா. கலைவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இங்கு இளைஞர்களிடையே
கலையம்சங்களை ஊக்குவிக்கும் வகையில் ”மூன்றாவது கண்”
கலை
குழுவின் பிரதிநிதி ஜோதிராஜா சுமன் அவர்களும் கலந்து தனது கருத்துகளை
தெரிவித்திருந்தார். இங்கு லைற்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் நடப்பாண்டுக்கான நிர்வாகசபை
தெரிவுசெய்யப்பட்டது. இந்நிகழ்வை லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் இளைஞர்,
மகளிர்
பிரிவின் பொறுப்பாளர் இ. மதுசங்கர்
இணைப்பு செய்திருந்தார்





















