கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோபாலப்பிள்ளை குகன் எழுதிய 'நீலவாணன் கவிதைகள் ஒரு நுண்ணாய்வு' எனும் நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொது வாசிகசாலை கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (5ஆம் திகதி ) இடம்பெற்றது.
மகிழவட்டவானை பிறப்பிடமாகக் கொண்ட குகன் ஆய்வுக் கட்டூரைகளையும் எழுதிவருபவராவார். தற்போது இவர் 'நீலாவாணன் கவிதைகள் - ஒரு நுண்ணாய்வு' எனும் தலைப்பிலான நூலினையும் வௌியிட்டுள்ளார்.
இந் நிகழ்வில் தமிழ்துறை பேராசிரியர் எஸ்.யோகராஜா, முன்னாள் கல்வி அதிகாரி வீ.தங்கத்துரை போன்றோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது மொழித்துறை பேராசிரியர் எஸ்.யோகராஜா பேசுகையில், பல்கலைக்கழக மாணவர்களின் சிறந்த ஆய்வுகள் நூல் வடிவில் வெளிவராமானால் பல்கலைக்கழகத்தினுள்ளே முடக்கப்பட்டு இறுதியில் கறையானுக்கு இரையாகப் போகும் நிலைதான் காணப்படுகின்றது. இவ்வாறான மிக பெறுமதிமிக்க ஆய்வுகளை உரிய மாணவர்கள் வெளியிட வேண்டும் அல்லது பல்கலைக்கழகம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். என தமிழ்துறை பேராசிரியர் எஸ்.யோகராஜா தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில், நம்மில் உள்ள ஒரு சிலரைத் தவிர அனேகர் கல்விகற்று முதலாவது பட்டம் பெற்றவுடன் கற்றல் செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார்கள் அதேபோன்று சிறந்த ஆய்வுகளைச் செய்யக்கூடிய மூத்த எழுத்தாளர்களும் குறுகிய காலத்திலே ஆய்வுப் பணியை நிறுத்திவிடுவார்கள்.
பகுதிநேர விரிவுரையாளர் இருப்பதுபோல் இப்போது பகுதிநேர ஆய்வாளர் என்று சொல்லக்கூடிய போக்குகள் கூட இன்றைய ஆய்வாளர் மத்தியில் இருக்கிறது. இதற்கு காரணம் உண்மையான நேசிப்போடு ஒரு விசுவாசமாக அந்த ஆய்வுகளை செய்யவேண்டும் என்ற தாகம் இல்லாமைதான்.
தற்போதய மாணவர்களின் நல்ல பல ஆய்வுகள் இருக்கின்றன ஆனால் அவற்றை நூல்வடிவில் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. வந்தோம் ஒரு சிறப்பு கல்வியை பயின்றோம், எழுதினோம் சென்றோம் என்ற எண்ணத்துடன்தான் இருக்கின்றனர்.
நான் கடந்த சில வருடங்களுக்கு முன் என்னால் பெற்ற தகவலின்படி பேராதனை பல்கலைக்கழகத்தில் 12 மாணவர்களும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 7 மாணவர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்களும் தமது ஆய்வுகளை நூல் வடிவில் வெளியிட்டிருக்கின்றார்கள். ஆனால் எமது கிழக்கு பல்கழைக்கழக மொழித் துறையில் எத்தனையோ சிறந்த தரமான ஆய்வுகள் பெறப்பட்டாலும் கூட அதை ஏதோ ஒரு காரணத்தால் வெளியிடுவதில்லை. நூலாக்கம் செய்யும் செயற்பாடுகள் கல்கலைக்கழக்த்தால் இயலாது என நினைக்கின்றேன், அது சில மாணவர்களுக்கு பொருளாதார பிரச்சனையாகவும் இருக்கும் ஆனாலும் மாணவர்கள் ஆர்வம் காட்டினால் சமுக நிறுவனங்கள் உதவியுடன் அத்தகைய செயற்பாட்டினை மேற்கொள்ளலாம். எனத் தொரிவித்தார்.


















