(யூ.கே. காலித்தீன்)
இன்று அதிகாலை அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசமான கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தின் நடுத்துறை கடற்கரை பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஹசனாத் பள்ளிவாசலின் குர்ஆன் மதரஸாவினதும், வாடிகளினதும், சில கட்டடங்களின் கூறைகளும், மற்றும் தோணிகளும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

















