பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் பெரியகல்லாற்றில் பரிசோதனை ! பலருக்கு எதிராக வழக்குப் பதிவுகள்

(இ.சுதாகரன்)

மிக அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்புறப் பகுதிகளில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் டெங்கு நுளம்புகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இதன் ஒரு அங்கமாக களுதாவளை பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட பெரிய கல்லாறு கிராமத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் மக்களின் குடியிருப்புக்கள் திடீர் பரிசோதனை நடத்தப்பட்டன.

டெங்கு தொடர்பான பரிசோதனைகளில் பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான ப.யதுநாதன், கே.குபேரன் , வி.வேணிதரன் மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எம்.பி.வீரமல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட திவிநெகும வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் சார்பில் ஏற்பாட்டாளர் இரா.பிறேமராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது டெங்கு தொடர்பான அபாய எச்சரிக்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் பல தடவைகள் விடுக்கப்பட்ட நிலையில் அவற்றினை கருத்திற் கொள்ளாது தமது சுற்றுச் சூழலை வைத்திருந்த பலருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வி.வேணிதரன் தெரிவித்தார்.