போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு வாரத்தின் மூன்றாவது நாளான இன்று(08) விளையாட்டு உத்தியோகத்தர் அவர்களின் நெறிப்படுத்தலினுடாக பிரதேச செயலாளர் என்.வில்வரத்தினம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான உடற்பயிற்சியானது பிரதான வீதியினுடாக சுமார் இரண்டு கிலோமீற்றர் துரம் சென்று பயிற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சிகளும் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆண்கள் அணியினர்களுக்கும் பெண்கள் அணியினர்களுக்கும் கயிறிழுத்தல் போட்டியும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
இப்போட்டியானது பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், விளையாட்டு உத்தியோகத்தர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போட்டியில் ஆண்கள் அணியில் கபாலி அணியினரும், பெண்கள் அணியில் நக்மா அணியினரும் வெற்றிபெற்றனர்.
இவ்வணியினர்களுக்கு மைலோ வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





























