படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 11ஆவது ஆண்டு நினைவு அஞ்சலியும் கானயீர்ப்பு போராட்டமும்


திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 11ஆவது ஆண்டு நினைவு அஞ்சலியும் கானயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு நாரில் ஞாயிற்றுக்கிழமை காலை (5ம் திகதி) இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகில் இந் நிகழ்வு, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக செயற்பாட்டுக்கான சுதந்திர இயக்கம் ஆகிய அமைப்புக்களால் ஓழுங்கு செய்த இந் நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜனி; உருவப்படத்திற்கு மலர் சூடி தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலளர்களுக்கு நீதி வழங்கக் கோரியும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்திருந்த ஊடக செயற்பாட்டுக்கான சுதந்திர இயக்க ஊடகவியலாளர்கள் மற்றும்  மதகுருமார், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.