முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் இருமாடி தொழிநுட்ப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் இருமாடி தொழிநுட்ப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(13) திங்கட்கிழமை இடம்பெற்றது.

18மில்லியன் ரூபாய் செலவில், அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறித்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

மத்திய அரசின் நிதியொதுக்கீட்டின் கீழ் மாகாணசபையின் அனுசரணையில் அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல்லினை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரன், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் கரிகரராஜ், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் மற்றும் கோட்டப்பாடசாலைகளின் அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.