மட்டக்களப்பு தம்பதியினரை கைது செய்துள்ள இந்தியாவின் கியூ பிரிவு காவல் படையினர்..!

இலங்கையிலிருந்து, இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு கடல் மார்க்கமாக சென்ற தம்பதியினரை தமிழக கியூ பிரிவு காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

மேலு சம்பவம் தொடர்பாக இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலானது, மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான தர்மகுமார் மற்றும் 33 வயதான நைன்னுருஷா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

குறித்த தம்பதியினர் சட்டவிரோதமான முறையில், படகொன்றின் மூலம் ராமநாதபுரத்திலுள்ள தங்கச்சிமடத்தில் இறங்கியுள்ளநிலையில், இருவரும் திருமங்கலத்திலுள்ள உச்சபட்டி இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர்.


இந்நிலையில் தமிழக கியூ பிரிவு காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும், மதுரை ஆஸ்டின்பட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறித்த இந்திய ஊடகம் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.