கிரான் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரத்திற்கு 'சேவா பிரசாதினி அபிசேஸ்' விருது வழங்கி கௌரவிப்பு

(ஜெ.ஜெய்ஷிகன்)
 கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களிற்கு 'சேவா பிரசாதினி அபிசேஸ்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 03.03.2017ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வனவிலங்கு தினத்தை சிறப்பித்து நடைபெற்ற நிகழ்விலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டதையிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத் தக்கது.